Saturday, 21 November 2015

முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம்

திருச்சி, : திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந் தது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித் தார். பொருளாளர் குஞ்சான் முன்னிலை வகித் தார். கூட்டத்தில், தமிழகத் தில் முத்தரையர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு வலியுறுத்துவது. அரசியல் விழிப்புணர்வு மாநாட் டை வரும் மே மாதம் நடத்துவது. இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகிப்பது. இந்தாண்டு சென்னையில் நடை பெறும் முத்தரையர், வலையர், பரதவலையர், பரதவர், அரையர் கூட்டமைப்பு மாநாட்டில் அனை த்து நிர்வாகிகளும் கலந்து கொள்வது. திருச்சி அரசு மருத்துவமனையில் நவீன கருவிகளை விரை வில் செயல்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளி க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ராஜமாணிக்கம், விசுவநாதன், சங் கர், மதி, கவிஞர் லோக நாதன், மூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர். முன்னதாக செயலாளர் சிவராஜ் வரவேற்றார். துணைத்தலைவர் பெரியகோபால் நன்றி கூறினார்.

Courtesy: Dinakaran

No comments:

Post a Comment